மழைநீர் கால்வாய் பணி தொடக்கம்...பொதுமக்கள் கோரிக்கை!

மழைநீர் கால்வாய் பணி தொடக்கம்...பொதுமக்கள் கோரிக்கை!

மழைக்காலம் நெருங்கி வருவதைத் தொடர்ந்து சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.


கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில்  அடுத்த மழைக்காலம் வருவதற்குள் சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக வெள்ள தடுப்பு நடவடிக்கையாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Arumugasamy-Commission-report-submission

தியாகராயநகர், சூளை, கோடம்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கும் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.