தடுப்பூசி போடும் பணி... சென்னையில் மீண்டும் துவக்கம்...

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று ஒவ்வொரு மையத்திலும் தலா 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணி... சென்னையில் மீண்டும் துவக்கம்...
தடுப்பூசி மருந்து பற்றாக்குறை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தொடர்ந்து இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் தமிழகத்துக்கு 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் வந்துள்ளன. இதையடுத்து இன்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு மையத்திலும் 300 நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் என்றும் நேரடியாக வருபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது. அதே சமயம் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படாது எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
 
இந்நிலையில். கல்விக்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சென்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.