மன அழுத்தத்தை போக்குவது எப்படி? டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை!

மன அழுத்தத்தை போக்குவது எப்படி? டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை!

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை போக்குவது எப்படி என தமிழ்நாடு காவல்துறை அதிகாரி டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.

கோவை சரக டிஜஜி சி.விஜயகுமார் ஐபிஎஸ் துப்பாக்கியால் சுட்டு நேற்று காலை தற்கொலை செய்து கொண்டதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் ஒவ்வொரு மண்டலத்திலும் தற்போது காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.

இதையும் படிக்க : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ்...அடுத்த சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்!

அதன் ஒரு பகுதியாக இன்று காலை மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில், தற்போது திருச்சியில் மத்திய மண்டல காவல் சரகத்திற்கு உட்பட்ட தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட 9- மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மன அழுத்தத்தை போக்குவது எப்படி? என்பது போன்ற பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

இதில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதில் காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நட்புறவை பேணிக்காக்க வேண்டும் என்றும் டிஜிபி  சங்கர்ஜிவால் அறிவுரை கூறினார். மேலும் உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.