குழந்தைகள் நலக்குழுவினர் மீது நீதிமன்றம் அதிருப்தி...!காரணம் என்ன?

குழந்தைகள் நலக்குழுவினர் மீது நீதிமன்றம் அதிருப்தி...!காரணம் என்ன?

பள்ளி மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய விவகாரத்தில், அவசரகதியில் செயல்பட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் போலீசாரின் செயலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடலூரில் பள்ளி மாணவிக்கு, சக மாணவர் ஒருவர் பேருந்து நிலையத்தில் வைத்து மஞ்சள் கயிறு கட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

இதையும் படிக்க: சிவில் கோர்ட் உத்தரவுக்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கில்...நீதிபதியின் உத்தரவு என்ன?

இதைத்தொடர்ந்து மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

மேலும், முழுமையாக விசாரணை நடத்தாமல் அவசர கதியில் செயல்பட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் மாணவன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினரின் செயலுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.