ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்..!

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்..!

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது. 

பள்ளிகளில் பணி புரிந்த  துப்புரவு பணியாளர்கள், அலுவலக  உதவியாளர்கள், காவலர்களுக்கான பண பலன்கள் மற்றும்  பதவி  உயர்வு  தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாதால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் காகர்லா உஷா மற்றும் நந்தகுமார்  மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது. 

இன்னிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்ட   IAS அதிகாரி காகர்லா உஷா மற்றும் நந்தகுமார் IAS ஆகிய இரு அதிகாரிகளுக்கும் நீதிபதி பட்டு தேவானந் முன் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

நீதிமன்றத்தை அவமதித்த 2 ஐஏஎஸ் அதிகாரிகள்

வழக்கு விசாரணையின்போது, கல்வித்துறையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் பள்ளிகளில் வேலை பார்த்த கடைநிலை ஊழியர்களான துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், பள்ளியில் காவலராக பணிபுரிவர்களுக்கான பண பலன்கள் பதவி உயர்வுகளை நடைமுறைப்படுத்தவில்லை என நீதிபதிகள் கூறினர்.

அப்போது, நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக  IAS அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை  முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

மேலும், தங்களுக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தனர். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டு பிடிவாரண்டை ரத்து செய்தார்.

”இந்த வழக்கில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு  பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட உத்தரவை முறையாக  சென்னை காவல்துறை ஆணையர் நடைமுறைப்படுத்தவில்லை; இது வேதனை அளிக்கிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும்,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் 80 சதவீத நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் கல்வித்துறையில் இருந்து தான் தாக்கல் செய்யப்படுகிறது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொள்வதா என சாடியவாறு  கருத்து தெரிவித்து நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிக்க   | அமைச்சர் உதயநிதி மீது மான நஷ்ட வழக்கு போட்ட இபிஎஸ் ..!