காற்றில் பறந்த கொரோனா நெறிமுறைகள்... காசிமேட்டில் குவிந்த கூட்டம்...

சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்ததால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

காற்றில் பறந்த கொரோனா நெறிமுறைகள்... காசிமேட்டில் குவிந்த கூட்டம்...
சென்னையின் மிகப்பெரிய மீன் சந்தையான காசிமேட்டில் வார இறுதி நாட்களில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். மேலும், இந்த சந்தையிலிருந்து சென்னை முழுவதும் விற்பனைக்காக மீன்கள் அனுப்பப்படும். இந்நிலையில், காசிமேடு மீன் சந்தையில்  ஏராளமானோர்  மீன்களை வாங்க அலைமோதினர். வியாபாரிகள், பொதுமக்கள் என பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலேயே மீன்களை வாங்கவும் விற்கவும் செய்தனர்.  
 
அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று அதிகமாக தொடங்கியுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மக்கள் அதிகமாக கூடும் 9 இடங்களை மூட உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், காசிமேடு மீன் சந்தையில், மக்கள் அதிகம் குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.