பாதியிலேயே வெளியேறிய மேயர்...வழிமறித்த கவுன்சிலர்கள்!

பாதியிலேயே வெளியேறிய மேயர்...வழிமறித்த கவுன்சிலர்கள்!

கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து மேயர் பாதியில் வெளியேறிய நிலையில், கவுன்சிலர்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. 

கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் சுந்தரி ராஜா அறிவித்தார். இதனை அடுத்து பாமக கவுன்சிலர் சரவணன் கடலூர் சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியபோது, போதிய நேரம் அளிக்காததால் அவர் கூட்டத்தை விட்டு வெளியேறினார். 

இதையும் படிக்க : முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரக்ஞானந்தா...!

தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையர் தன்னிச்சையாக செயல்படுவதால் தங்களது பணிகளே தடைப்படுவதாக குற்றம் சாட்டினார். உடனே, மாநகராட்சி ஆணையர் கூட்டத்திலிருந்து வெளியேறினார். 

இருப்பினும், தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என கூறிய நிலையில், மேயர் சுந்தரி ராஜா கூட்டத்தில் இருந்து  பாதியிலேயே வெளியேறினார். அப்பொழுது திமுக கவுன்சிலர்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.