வரும் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் திரையங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தினசரி கொரோனா  பரவல் 100-க்கு கீழ் குறைந்ததையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 15-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய தளர்வுகளின்படி, கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

100 பணியாளர்களுடன் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்தலாம் என அறிவித்துள்ள புதுச்சேரி அரசு,   சுற்றுலாத் தலங்களில் கொரோனா தடுப்பு விதிகளுடன் 50 சதவீதம் பேர் வரை அனுமதிக்கலாம் என்றும், மதுபானக் கடைகளுடன் இருக்கும் பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.