இன்று முதல் கொஞ்சம் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

இன்று முதல் கொஞ்சம் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன கூடிய ஊரடங்கு  இன்று  முதல் அமலுக்கு  வருகிறது.

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகளும், காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். இறைச்சி கூடங்கள் மற்றும் மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. 

அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் கொடுத்து பதிவுகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகள் உள்ளிட்ட சுயதொழில் செய்பவர்கள், மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது

வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவு உதவியுடன் செல்ல அனுமதிக்கடுகிறது. மேலும் வாடகை டாக்சியில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 நபர்களும் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர பணிகள் காரணமாக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்கலாம்.

சலூன் கடைகள் அழகு  நிலையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட தடை நீடிக்கப்படுகிறது. பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.