பணி பிரிவு உபசார விழாவில் கதைக் கூறிய டிஜிபி கந்தசாமி....!!

பணி பிரிவு உபசார விழாவில் கதைக் கூறிய டிஜிபி கந்தசாமி....!!

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் டிஜிபி கந்தசாமி வருகின்ற 30ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையயில் காவல்துறையினர் பிரிவு  உபசார விழா நடத்தினர்.  எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் டி ஜி பி சைலேந்திர பாபு உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று பிரியா விடை அளித்தனர்.

34 வருடங்கள் காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்த  ஐ பி எஸ் அதிகாரி தற்போது தமிழ்நாடு  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநர் டி ஜி பி கந்தசாமி வருகின்ற 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு காவல் துறையினர் பிரிவு உபசார விழாவை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடத்தினர்.

இந்த பிரிவு உபசார விழாவில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் டி ஜி பி சைலேந்திர பாபு உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இவ்விழாவில் பங்கேற்று டிஜிபி கந்தசாமிக்கு பூங்கொத்துக்களை கொடுத்து பிரியா விடை அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த டி ஜி பி கந்தசாமி  1989ல் ஐ.பி.எஸ், அதிகாரியாக பொறுப்பேற்றார்.  மதுரை மாவட்ட கமிஷனராகவும் விழுப்புரம், மதுரை, திருச்சி டி.ஐ.ஜி.,யாகவும் பணிபுரிந்துள்ளார்.  அதன்பின், சி.பி.ஐ.,யில் இணை இயக்குநராகவும் தமிழ்நாடு காவல்துறை தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டி ஜி பி ஆகவும் பணியாற்றியவர் தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டி ஜி பி ஆக இருக்கிறார்.

குதிரைப்படையினர், பேரிடர் மீட்பு படையினர் ,பெண்கள் கமெண்டோ அணியினர், தமிழ்நாடு ஆண்கள் சிறப்பு அணியினர், அதிவிரைவு படையினர், தமிழ்நாடு கடலோர காவல்படையினர் உள்ளிட்ட அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது அணிவகுப்புகளை ஓய்வு பெற இருக்கும் டிஜிபி கந்தசாமி ஏற்றுக்கொண்டார்.

“கடவுளின் ஆசிர்வாதத்தால் இந்திய காவல் பணியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.  தமிழ்நாடு காவல்துறையை உலக அளவில் தலைசிறந்த காவல்துறையாக நிலை நிறுத்துவேன்.  அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.  தமிழ்நாடு அரசுக்கும் ,அரசு அதிகாரிகளுக்கும் என் மனபூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் என பெருமையாக சொல்வேன்.  எங்கள் தந்தை எங்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என குறிக்கோள் கொண்டிருந்தார்.  நல்ல பள்ளி கூடங்களில் எங்களை சேர்த்து எங்களை படிக்க வைத்தார். ” எனப் பேசினார்.

நான் ஒரு சிறந்த மனிதனாக இன்று இருப்பதற்கு என் அம்மாவின் அன்பு தான் காரணம்.  என் மனைவியும்,மாமியாரும் எனக்கு துணையாக இருந்தார்கள்.  என் மகன் எனக்கு குருவாக இருந்தார்.  இந்த உலகத்தில் அரசு,தனியார் என எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அதில் பணிபுரியும் 20 சதவீத ஊழியர்கள் நேர்மையாகவும் கடின உழைப்பு செய்பவர்களாகவும் நிறுவனத்திற்கு உறுதுணையாகவும் இருப்பார்கள்.  பத்து சதவீதத்தினர் நம்பிக்கையற்றவர்களாகவும், பொறுப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். மீதமுள்ளவர்கள் ஒரு வழிகாட்டியை நாடி இருப்பார்கள்.  நீங்கள் அர்ப்பணிப்புடன் நேர்மையாக இருந்தால் மீதமுள்ளவர்கள் உங்களை பின் தொடர்வார்கள்.” எனக் கூறினார்.

நான் இந்தியனாகவும் தமிழனாகவும் இருப்பதற்கு பெருமை கொள்கிறேன்.  காவல் நிலையத்தில் அனைவரையும் சரிசமமாக நடத்த வேண்டும் ஸ்டேட்டஸ் பார்த்து ஒருவரை கீழே அமர வைப்பது ஒருவரை மேலே அமர வைப்பது வைப்பது கூடாது என அறிவுரை வழங்கினார்.  மக்கள் பேசுவதை கவனித்து கேட்க வேண்டும்.  அதற்கு ஒரு கதை சொல்கிறேன், சான் பிரான்சிஸ்கோ மாநகரில் ஒரு பாலம் உள்ளது.  அந்த பாலத்தில் அடிக்கடி யாராவது தற்கொலை செய்து கொள்வார்கள்.  தற்கொலைகளை தடுக்க பேட்ரோல் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த வேண்டும் என சான் பிரான்சிஸ்கோ காவல்துறை முடிவு எடுத்தது.

ஒரு மாலையில் ஒரு பெண் தற்கொலை செய்வதற்காக அங்கு வந்து இருந்தாள்.  அவரிடம் காவல் அதிகாரிகள் எதற்காக தற்கொலை என்ன பிரச்சனை என்று விசாரணை செய்த போது எனக்கு வேலை இல்லை ,நான் பேசுவதை யாரும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறினார்.  காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்கள் சொல்வதை நாம் கவனித்துக் கேட்க வேண்டும்.  ஒரு காவலர் எப்பொழுதும் திட்டமிடுதலில் மாற்று திட்டம் ஒன்றை அதாவது பிளான் பி என்று ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி என் பணிக்காலத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் எனப் பேசினார்.

இதையும் படிக்க:  சென்னை தீவுத் திடலில் உணவு திருவிழாவை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்!!