சேராத இடத்தில் சேர்ந்ததால் தேமுதிக டெபாசிட் இழந்தது: ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்

தேமுதிக சேராத இடத்தில் சேர்ந்து தற்போது சுயச்சையை விட குறைவான வாக்கு வங்கிகள் எடுத்து டெப்பாசிட் இழந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.  

சேராத இடத்தில் சேர்ந்ததால் தேமுதிக டெபாசிட் இழந்தது: ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அண்ணா தொழிற்சங்க சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் திருமங்கலம் அடுத்துள்ள டி. குன்னத்தூரில்  நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், புதிதாக பொறுப்பேற்றுள்ள புதிய அரசு ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு முன்பு கொரோனா தடுப்பூசியை உள்ளூரில் உற்பத்தி செய்யது மக்களுக்கு வழங்க உள்ளதாக கூறினார்கள் ஆனால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்றார்.பெட்ரோல், டீசலின் மாநில வரியை குறைப்போம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினால் இன்றைக்கு விலை உயர்வை குறைக்க முடியும் என குறிப்பிட்டார்.

தற்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தடுப்பூசி செலுத்துவதில் விவரம் கேட்டதில் என்ன தவறு உள்ளது அவர் என்ன ராணுவ ரகசியத்தையா கேட்டார், தடுப்பூசி விவரம் சொல்வதில் ஏன் தயக்கம் என உதயகுமார் கேள்வி எழுப்பினார்.கடந்த தேர்தலில் தேமுதிக சேராத இடத்தில் சேர்ந்து தற்போது நடுத் தெருவில் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

அதிமுகவிடம் சேர்ந்திருந்தால் கூட தேமுதிகவின் வாக்கு வங்கி அதிகரித்திருக்கும் ஆனால் தற்போது சுயச்சையை விட குறைவான வாக்குகள் எடுத்து டெபாசிட் எழுந்துள்ளது என்றார்.தற்போது முகவரி இழந்த காணாமல் போன கட்சிகள் தற்போது அதிமுகவை வலுப்படுத்த மீண்டும் இணைய விரும்புகிறோம் என கூறினார்கள் என்றால் அவர்களை  இருகரம் கூப்பி வரவேற்க உள்ளதாக ஆர் பி உதயகுமார் கூறினார்.