“நல்லது செய்தால் தப்பா?” வி.சி.க. கவுன்சிலரை விளாசிய தி.மு.க. வட்டச் செயலாளர்...

சென்னையில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வந்த கவுன்சிலரை வட்டச்செயலாளர் ஆபாச வார்த்தைகள் பேசி அடித்து விரட்டியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

“நல்லது செய்தால் தப்பா?” வி.சி.க. கவுன்சிலரை விளாசிய தி.மு.க. வட்டச் செயலாளர்...

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழ்நாட்டில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து வருகிறது.  இந்நிலையில் சென்னை அசோக் நகர் 135-வது வார்டு பிரதிநிதியாக விடுலைச் சிறுத்தைக் கட்சியைச் சேர்ந்த சாந்தி என்கிற யாழினி என்பவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மழைநீர் வடிகால் பணிகளில் வார்டு பிரதிநிதி என்ற முறையில் அவரும் ஈடுபட்டார். அந்தவகையில்,  80-வது தெருவில் உள்ள பி.டி.சி. குடியிருப்பு பகுதிக்குள் சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. வட்டச் செயலாளரான செல்வகுமார் என்பவர் சாந்தியிடம் ஆவேசமாக சண்டையிட்டுள்ளார். 

மேலும் படிக்க | ஒற்றை மழைக்கு தாங்காமல் ஆட்டம் கண்ட காவல் நிலையம்..!

என் ஏரியாவுக்குள் வருவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்த பகுதியில் நான்தான் எல்லாம்.. வட்டச்செயலாளரும் நான்தான்.. கவுன்சிலரும் நான்தான்.. என கொக்கரித்த செல்வகுமார், சாந்தியை ஆபாச சொற்களால் திட்டியதோடு அடித்து விரட்டுவதற்கு முயன்றார்.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் வட்டச் செயலாளர் கோ.சு.மணி என்பவரும் அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்து சாந்தியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | “இது தரம் தாழ்ந்த செயல்" அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி!

அப்போது கவுன்சிலர் சாந்திக்கு சிலர் சாதககமாக பேசியதையடுத்து, செல்வகுமாரின் குடும்பமே சாந்தியைக் கட்டம் கட்டியது. அருகில் கிடந்த பெரிய உருட்டுக் கட்டையை எடுத்து சாந்தியை நோக்கி ஓங்கி அடிக்க வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டை வேறொருவர் மீது விழுந்ததில் முதுகு பழுத்தது. 

இதுகுறித்து கவுன்சிலரிடம் கேட்டபோது இந்த பிரச்சினை தற்போது ஏற்பட்டதில்லை. மாமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற்று தாம் வெற்றி பெற்றதில் இருந்தே செல்வகுமார் தன்னை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், வேலைகளை செய்ய விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார் சாந்தி. 

மேலும் படிக்க | முதலமைச்சரை விமர்சித்த அதிமுக மூத்த தலைவர் ராஜன் செல்லப்பா!!!

தி.மு.க. கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்திருந்தாலும், சில சமயங்களில் இதுபோன்ற பதவிச் சண்டைகள் ஆங்காங்கே நிகழ்ந்துதான் வருகின்றன. பொது வாழ்க்கையில் இறங்கி மக்களுக்கு நல்லது செய்யப் போய், தற்போது கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பெண் கவுன்சிலருக்கு கிடைக்கப்போகும் நீதி என்ன? 

மேலும் படிக்க | ”திமுக தமிழ் மொழியை அழிக்க வேண்டாம்”.. தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்..!