திமுக ஆப்ரேசனில் அடுத்த டார்கெட் நெல்லை மேயரா?.. மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பி.எம்.சரவணன்!!

திமுக ஆப்ரேசனில் அடுத்த டார்கெட் நெல்லை மேயரா?.. மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பி.எம்.சரவணன்!!

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில், மேயருக்கு எதிராக திமுக உள்ளிட்ட 55 கவுன்சிலர்களும் போர் கொடி ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று, தென்காசி மாவட்ட உட்கட்சி பூசல் விவகாரத்தில், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபனை அதிரடியாக நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார். இது தொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக பணியாற்றிய பொ.சிவபத்மநாதனை, அப்பொறுப் பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக சுரண்டை நகரச் செயலாளர் ஜெயபாலனை தெற்கு மாவட்ட செயலாளராக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், திமுக தலைமைக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தும் வகையில், நெல்லையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மேயருக்கும், உறுப் பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்கள், நிதி மதிப்பீடு குழு அமைப்பது தொடர்பாக நடந்த கூட்டத்தில், மாமன்ற உறுப் பினர்களுக்கு நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி. பி.எம். மைதீன்கான் கொலை மிரட்டல் விடுத்ததாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அப்பொழுது, ஒட்டுமொத்த 55 கவுன்சிலர்களும் மேயருக்கு எதிராக போர் கோடி ஏந்திய நிலையில், பெண் கவுன்சிலர்கள் உள்ளே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை தலைகீழாக மாறிய நிலையில், கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு, கவுன்சிலர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் பாதியிலேயே மேயர் மற்றும் துணை மேயர் வெளியேறியுள்ளனர்.

ஏற்கனவே, திமுகவில் உள்ள மூன்று மாவட்ட செயலாளர்கள் மீது கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள முலையில், தற்போது நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி. பி.எம். மைதீன்கான் மீது குற்றச்சாட்டை முன் வைத்து, மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போர்க்கொடி ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம், திமுக தலைமைக்கு, மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க || திமுக தலைமையின் அதிரடி நீக்கம்...தென்காசியில் நடந்தது என்ன?