"கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சியதில்லை" - ஆர்.எஸ். பாரதி.

"கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சியதில்லை" - ஆர்.எஸ். பாரதி.

கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சியதில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வில்லை என்று கூறிய அவர், எதிர்கட்சித் தலைவர் பொய்யை சொன்னாலும் பொருந்தச் செல்ல வேண்டும் என்றார்.  

Tamil Nadu Electricity Minister V Senthil Balaji arrested by ED amid money  laundering probe; breaks down in tears on camera

மேலும், தங்கமணி, வைரமணி வீடுகளில் ரெய்டு நடைபெற்ற போது டெல்லி சென்று பாஜகவினரை சந்தித்ததாக கூறினார். இதற்கு கைமாறாக ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அதிமுகவால் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்தியாவுக்கு வழிகாட்டும் நிலையில் திமு-க உள்ளதாக தெரிவித்த அவர்,  சுமார் 70 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்ட கூட்டம் தான் அதிமுக என்றும் விமர்சித்தார்.

Jayalalithaa's Food Bill at Apollo Hospital Cost Rs 1.17 ...

மேலும், ஸ்டாலின் உழைப்பை கொச்சை படுத்த வேண்டாம் என்றவர்,  எடப்பாடிக்கு சட்டமும் தெரியாது; வரலாறும் தெரியாது என்றும் சாடினார்.  மேலும், பா.ஜ.க.வின் வழிகாட்டுதல்படி எடப்பாடி பழனிச்சாமி வழக்குகளில் இருந்து தப்பி வருகிறார் என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க    | அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி...! காவேரி மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு....!