மாநிலங்களவை உறுப்பினராக திமுகவின் எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வு...

மாநிலங்களவை உறுப்பினராக திமுகவின் எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக திமுகவின் எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வு...

அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த  முகமது ஜான் மறைவை அடுத்து  அந்த இடம் காலியாக இருந்தது.  இதற்கான தேர்தல் அண்மையில்  வெளியிடப்பட்ட நிலையில் திமுக சார்பில்  மாநிலங்களவை உறுப்பினராக எம்எம் அப்துல்லா அறிவிக்கப்பட்டார்.  இதையடுத்து அவர் வேட்பு மனு தாக்கல்  செய்த நிலையில் பேரவையில்   போதிய எம்எல்க்கள் பலம் இல்லாததால்  அவரை எதிர்த்து  யாரும் போட்டியிடவில்லை .   

இதனிடையே மாநிலங்களவை தேர்தலுக்கான  வேட்பு  மனு தாக்கல் செய்வதற்கான   தேதி நிறைவடைந்ததுடன் இன்று  திமுக வேட்பாளர் அப்துல்லா மனு மீது  பரிசீலனை நடைபெற்றது. இதில் போட்டியின்றி  திமுகவின் எம்எம் அப்துல்லா  எம்பியாக தேரவு செய்யப்பட்டதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அமைச்சர்கள் எ.வவேலு ஐ.பெரியசாமி  பொன்முடி  உள்ளிட்டோர்  முன்னிலையில் சட்டப்பேரவை செயலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன்,வெற்றி பெற்றதற்கான சான்றிதழை  எம்எம்அப்துல்லாவிடம் வழங்கினார்.சென்னை தலைமை செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது