தமிழகத்தில் கொரோனா உயர்கிறதா..? சென்னையில் தினசரி பாதிப்பு குறைந்தது...

தமிழகத்தில் தற்போது ஏழாயிரத்து 172 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா உயர்கிறதா..? சென்னையில் தினசரி பாதிப்பு குறைந்தது...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 600-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், நேற்று ஒருநாளில் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 40 ஆயிரத்து 411 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது ஏழாயிரத்து 172 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 697 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 96 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து,  வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 686 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக இருந்த நிலையில் நேற்று 126 ஆக குறைந்துள்ளது.