வீடுகளில் புகுந்து மக்களை அச்சுருத்திய கொடிய விஷப்பாம்புகள்....

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீடுகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 7 கொடிய விஷப்பாம்புகள் பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.

வீடுகளில் புகுந்து மக்களை அச்சுருத்திய கொடிய விஷப்பாம்புகள்....

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பாண்டியன். சிறுவயது முதலே அவ்வப்போது  வீடுகளில் புகுந்த பாம்புகளை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டு வருகிறார். இதுவரை 5000 க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார் என கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் வயல் மற்றும் தோட்டங்களில் அடைந்திருந்த விஷப்பாம்புகள் அருகில் உள்ள வீடுகளில் புகுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் வெவ்வேறு வீடுகளில் புகுந்து மக்களை அச்சுருத்திய 7 கொடிய விஷப்பாம்புகளை லாவகமாக பிடித்துள்ளார் பாம்பு பாண்டியன்.

இவைகளில் கண்ணாடி விரியன்,எண்ணெய் விரியன்,நல்ல பாம்பு உள்ளிட்டவை கொடிய விஷத்தன்மை பாம்புகளூம் அடங்கும். பிடிபட்ட 7 பாம்புகளும் மக்கள் நடமாட்டம் இல்லாத வனத்துறை காப்புகாட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது குறிப்பிடதக்கது.