டெல்டா, ஒமைக்ரான் வைரஸ்கள் சுனாமி வேகத்தில் பரவுகிறது...எச்சரிக்கையுடன் இருங்கள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்கள் ஒரு சேர தமிழகத்தில் சுனாமிபோல் பரவி வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டெல்டா,  ஒமைக்ரான் வைரஸ்கள் சுனாமி வேகத்தில் பரவுகிறது...எச்சரிக்கையுடன் இருங்கள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டடையில் உள்ள எம்.ஐ. டி. கல்லூரியில் கொரோனா வைரஸ் பாதித்த மாணவர்கள் அங்கு உள்ள மாணவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் கூறுகையில்,  

தமிழகத்தில் டெல்லா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளதாகவும், இவை இரண்டும் சுனாமி வேகத்தில் பரவி வருவதாகவும் தெரிவித்தார். மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், அதே நேரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

கொரோனா பரிசோதனை கொடுத்தவர்கள் முடிந்தவரை வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில், அரசு ஏற்படுத்தியிருக்க கூடிய இடங்களில் இருக்கலாம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இனி வரக்கூடியவற்றில் 80% ஒமைக்ரான் தொற்று தான் என்றும் ஆதலால் மக்கள் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.