ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைக்க மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது இதனை கண்டித்து திருப்பூர்  தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது,இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது,இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை நிறுத்தி வைக்க மேல்முறையீடு செய்தார்,அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டனையை நிறுத்திவைக்க எந்த காரணங்களும் இல்லை என்று கூறி  ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனை கண்டிக்கும் விதமாக  திருப்பூர் தெற்கு மாவட்ட  காங்கிரஸ் கட்சி சார்பில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு   20க்கு மேற்பட்டோர்   மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் தென்னரசு பேசுகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த நிலையில் அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது இதனால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க அதாவது காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து சந்தன உரைகளை ஆற்றினார்.

இதையும் படிக்க    | ராகுல்காந்தியின் இரண்டாண்டு சிறைதண்டனை உறுதி...தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!