தென் மாவட்டங்களில் அதிகம் பரவும் டெங்கு... முன்னெச்சரிக்கை நடவடிக்கை..?

பருவநிலை மாற்றத்தினால் மழை காலத்தில் வரக்கூடிய டெங்கு வைரஸ் தொற்றால் தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் மற்றும் இரண்டாயிரத்து 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் அதிகம் பரவும் டெங்கு... முன்னெச்சரிக்கை நடவடிக்கை..?
டெங்கு வைரஸிற்கு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
 
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மெல்ல தனியத்தொடங்கியுள்ள நிலையில் சில நாடுகளுக்கு முன்பு பருவமழை தொடங்கியது. மழை தரும் மகிழ்ச்சிக்கு மத்தியில் மழைக்கால நோய்களிடமிருந்து தற்காத்துக்கொள்வதும் அவசியமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு, காலரா போன்ற காய்ச்சல் பரவத்தொடங்கிவிடும் அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் தாக்கத்தின் வீரியம் சற்று மிகுதியாகவே காணப்படும். ஒவ்வொரு ஆண்டும் டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில் கடந்த ஆண்டு கொரொனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
 
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக டெங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் மட்டுமே இரண்டாயிரத்து 90 ஆக உள்ளது. டெங்கு மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், பருவ மழைக்கு முன்னதாகவே தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வீடுகளுக்கு சென்று தேவையில்லாத இடங்களில் கொட்டி கிடக்கும் குப்பைகளை சேகரிப்பத,  மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்வது, தண்ணீரில் மருந்து தெளிப்பது, ஆட்கள் செல்ல முடியாத நீர்நிலைகளில் டுரோன் கேமரா மூலம் மருந்து தெளிப்பது , அதேபோல பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.
 
வழக்கமாக டெங்கு காய்ச்சல் தொடங்குவதற்கு முன்னதாக பாதுகாப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர்களை வைத்து மேற்கொள்ளும் நிலையில் இம்முறை முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது அண்ணா பல்கலை கழகத்தோடு சென்னை மாநகராட்சி பணியாளர்களும் இணைந்து 3 ஆள் இல்லா விமானம் மூலம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் சோதனை அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவின் மூலம் தான் ஜிகா வைரஸ் பரவுகிறது அதனால் கொசு உற்பத்தி முற்றிலுமாக தடுத்தாலே டெங்கு உள்ளிட்ட வைரஸ் தமிழகத்திற்கு வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.