“துணை முதல்வர் உதய் அண்ணா” - அமைச்சர் மருமகளின் பேஸ்புக் பதிவு!!!

“துணை முதல்வர் உதய் அண்ணா” - அமைச்சர் மருமகளின் பேஸ்புக் பதிவு!!!

திமுக அரசின் இரண்டாண்டுகள் முடிவடைந்ததையடுத்து அமைச்சரவையில் 3வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என சில தினங்களாகவே அரசல் புரசலான செய்திகள்  வெளி வந்து கொண்டிருக்கும் சூழலில், 2006-2011 வரை முதலமைச்சராக இருந்த கருணாநிதி உடல்நிலை காரணமாக, பணிகளை பார்க்க துணை முதலமைச்சர் பதவி உருவாக்கப்பட்டு அப்பதவி மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் சில நாட்களாகவே துணை முதலமைச்சராகிறார் உதயநிதி என்ற பேச்சு தற்போது வரை அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கும் கடன் அவர்களது உழைப்புக்கு  கொடுக்கும் நம்பிக்கை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் | Tamil News Minister  Udhayanidhi ...

இந்நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் மனைவியுமான மெர்சி செந்தில் குமார் தனது முகநூல் பக்கத்தில்  “எங்களுக்கு துணை முதல்வர் உதய் அண்ணா” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஆர்வலரான மெர்சி செந்தில்குமார், சாத்தன் குளம் வியாபாரிகள் கொலை மற்றும் சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். சில கருத்துகள் சர்ச்சையாகியும் உள்ளது. வாடிகன், பாதிரியார்கள் குறித்து அவர் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வருவதற்கு முன்பே  திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி கடுமையாக உழைப்பதால் அவருக்கு பெரிய பதவி வந்தே தீரும. இந்த நாட்டில் மந்திரியாக வருங்காலத்தில் முதலமைச்சராக வேண்டும் என்பதெல்லாம் எங்கள் ஆசை எனவும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 1200 ரூபாய்க்கு சிலிண்டர் விலை........ பாஜக அரசை கேள்வி கேட்க முடியாத அடிமையாக அதிமுக,.... ! - செந்தில் பாலாஜி

அனைவரையும் ஈர்ப்பவர் உதயநிதி அண்ணா

அதனை தொடர்ந்து அவர் அமைச்சருமானார். இந்நிலையில் ‘துணை முதல்வர்’ என்ற அவர் குறிப்பிட்டதும் ஏதேனும் தகவலின் அடிப்படையில் கூறப்பட்டதா அல்லது தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார என்பது தெரியவில்லை. அதே சமயம் கருணாநிதி அமைச்சரவையில் முப்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்த பெரியசாமியின் மருமகள் அனுமான்யமாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.