தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி நாற்று நட்டு, நடனம் ஆடிய சுகாதாரத்துறை துணை இயக்குனர்...வீடியோ வைரல்

அரியலூர் மாவட்டத்தில் நாற்று நடும் பெண்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தும் விதமாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர், நாற்று நட்டு, நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி நாற்று நட்டு, நடனம் ஆடிய சுகாதாரத்துறை துணை இயக்குனர்...வீடியோ வைரல்

 அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெண்கள் பலர் விவசாய வேலைக்கு சென்று விடுவதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்த மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதாராணி, நேரடியாக வயலுக்கு சென்று, விவசாய பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும் அவர்களுடன் நாற்று நட்டு, ஆடிப்பாடி நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது, வைரலாகி வருகிறது. 

வயல்வெளிக்கு சென்று அவர்கள் பாணியிலேயே பேசி அவர்கள் அனைவரையும் ஊசி போட வைத்த செயல் பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.