கோவிந்தா, கோவிந்தா கோஷமின்றி வெறிச்சோடிய பெருமாள் கோவில்...

கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷமின்றி  துறையூர் பெருமாள் மலை கோவில் வெறிச்சோடி காணப்படுகிறது.

கோவிந்தா, கோவிந்தா கோஷமின்றி வெறிச்சோடிய பெருமாள் கோவில்...

கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷமின்றி  துறையூர் பெருமாள் மலை கோவில் வெறிச்சோடி காணப்படுகிறது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள தென்திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும் பெருமாள் மலையில், கொரோனா பரவல் காரணமாக, தமிழக அரசின் உத்தரவை பின்பற்றும் விதமாக பக்தர்கள் அனுமதியின்றி, இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மலைமேல் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி , தாயார், கருப்பண்ணார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அதிகாலை திருமஞ்சனம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வருடம்தோறும் புரட்டாசி மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்கள் விரதமிருந்து தென் திருப்பதி என அழைக்கப்படும் துறையூர் பெருமாள் மலையில் பெருமாளை சேவித்து தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தி செல்வது வழக்கம். தற்போது கோரானா பரவல் காரணமாக தமிழக அரசு புரட்டாசி மாதத்தில் வருகின்ற ஐந்து சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் அனுமதி இன்றி வழக்கமான நித்திய பூஜைகள் மட்டுமே செய்யப்படும் என அறிவித்துள்ளபடியால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்யும் பக்தர்கள் பெருமாளை தரிசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து புரட்டாசி சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாள் மலை வந்து பெருமாளை தரிசித்து செல்லும் நிலையில் தற்போது தமிழக அரசின் தடை உத்தரவால் பக்தர்கள் வருகையின்றி பெருமாள் மலை வெறிச்சோடி காணப்பட்டது.