ஆதரவற்ற,  கண்பார்வையில்லாத, மாற்று திறனாளி குழந்தைகள், திருப்பதி   கோயிலில் தரிசனம்...!  

ஆதரவற்ற,  கண்பார்வையில்லாத, மாற்று திறனாளி குழந்தைகள்,  திருப்பதி   கோயிலில்  தரிசனம்...!   

சென்னையில் இருந்து ஆதரவற்ற  குழந்தைகள், மாற்று திறனாளிகள், கண்பார்வையில்லாத மாணவர்கள் என 1008 பேரை திருப்பதி  ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம்  தனியார் அறக்கட்டளை நிறுவனம். 

ராஜஸ்தான் யூத் ஆசோசியேசன் மெட்ரோ மற்றும்  சென்னை உணவு வங்கி  இணைந்து ஆதரவற்ற  குழந்தைகள், மாற்று திறனாளிகள்  என சுமார் 1008 குழந்தைகளை  திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக அழைத்து வந்தனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி  மற்றும் சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்  உள்ளூர் ஆலோசனை குழுத் தலைவர் சேகர் ரெட்டி இணைந்து கொடி அசைத்து இதனைத் தொடங்கி வைத்தனர். பின்னர் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 32  அரசு பேருந்துகள் மூலம் திருமலைக்கு அழைத்து வரப்பட்டு 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மூலம்  மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசையில் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டது. 

சுவாமி தரிசனத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய மாணவர்கள் "திருப்பதி ஏழுமலையான் கோயில் என அனைவரும் பேசி வருவார்கள். நாங்கள் இங்கு வருவோம் என எதிர்பார்க்கவில்லை. எங்களை  இந்த அறக்கட்டளை மூலம் திருப்பதிக்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்து வைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கண் பார்வையற்ற சிறுவர்கள் நாங்கள், சுவாமியை நேரில் காணாவிட்டாலும்  கோயிலுக்குள் சென்றவுடன் புதிய உணர்வு எங்களுக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது",  என்றனர்.  

சுவாமி தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி கூறுகையில், ராஜஸ்தான் யூத் ஆசோசியேசன் மற்றும் புட் பங்க் இணைந்து ஆனாதை பிள்ளைகள், கண்பார்வையற்றோர், நடக்க முடியாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 90 சதவீதத்தினர் முதல் முறையாக ஏழுமலையான் தரிசனம் செய்துள்ளனர் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், முதல்முறையாக சுவாமி தரிசனம் செய்த இந்த சிறுவர்கள் உணர்ச்சி பூரிப்புடன் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர். தற்பொழுது 16 வயதிற்குட்பட்டவர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில் அடுத்த மாதம் சுவாமி தரிசனத்திற்காக வர முடியாத மூத்த குடிமக்களை தனியார் அறக்கட்டளை உதவியுடன் இணைந்து திருப்பதிக்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க    } முல்லை பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரித்தது - விவசாயிகள் மகிழ்ச்சி...!

இதில் அறக்கட்டளை நிர்வாகிகள்  நிர்மல் நஹர் - நிர்வாக அறங்காவலர், தலைவர் கபில் சோர்டியா, கிரிஷ் பண்டாரி - செயலாளர், கிஷன் ஜெயின் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க     } வங்காள பறவையை நீர் தூவி வரவேற்ற சென்னை விமான நிலையம்...!