அரசு வழக்குகளின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம்... சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்...

அரசு வழக்குகளின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அரசு வழக்குகளின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம்... சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்...

அரசு வழக்குகளின் அன்றன்றைய நிலவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தகவல் அளித்த அவர், பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கை எனவும், திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி 6 சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இன்றளவில் தமிழகத்தில் மொத்தமுள்ள 1186 நீதிமன்றங்களில், 990 நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங்களில் உள்ளதாகவும், 109 நீதிமன்றங்கள் அரசு கட்டங்களில் வாடகையில் உள்ளதாகவும், 86 நீதிமன்றங்கள் தனியார் கட்டிடங்களில் வாடகையில் உள்ளதாக கூறிய அவர், மத்திய அரசு நிதி ஒதுக்கும்பட்சத்தில் வாடகை கட்டிடங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அரசு வழக்குகளின் அன்றன்றைய நிலவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர்,  நிலுவையில் உள்ள நிதி தொடர்பான வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்தி வழக்கை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தை மேம்படுத்துதல் மற்றும் புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.