4 வது நாளாக எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள்...அதிரடி நடவடிக்கை எடுத்த அறநிலையத்துறை!

4 வது நாளாக எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள்...அதிரடி நடவடிக்கை எடுத்த அறநிலையத்துறை!

சிதம்பரத்தில் 4-வது நாளாக பக்தர்கள் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன்  பக்தர்களிடம்  வாக்குவாதமும் செய்ததால் பரபரப்பு நிலவியது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்றது. 

இந்த திருவிழாவையொட்டி, 4 தினங்களுக்கு கனகசபை மீது ஏறி பக்தர்கள் யாரும் சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதையும் படிக்க : Aavin VS Amul : ”ஆவின் நிறுவனத்துடன் எந்த நிறுவனமும் போட்டியிட முடியாது" அமைச்சர் திட்டவட்டம்!

இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் கோயிலுக்கு சென்று பதாகையை அகற்ற முயன்றனர். அதற்கு கோயில் தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.

இந்த நிலையில் கனகசபை மீது பக்தர்கள் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் வைத்திருந்த பதாகையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றியதால் அங்கு பரபரப்பு  நிலவியது.