ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் குவிந்த பக்தர்கள்... கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம்...

ஆடி18 வருவதையொட்டி ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் குவிந்த பக்தர்கள்... கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம்...
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடிமாத திருவிழாவையொட்டி கோவிலுக்கு அதிகப்படியான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் நோய்களை கட்டுப்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 3 வரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை அடைக்கப்படும் என மாவட்ட  நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
 
இதனால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் வீன் அலைச்சலைத் தவிர்க்கவே முன்னறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு தெரியாமல் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாளை மறுநாள் ஆடி 18 வருவதையொட்டி ராமேஸ்வரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர்.
 
மேலும் ராமநாதசாமி  திருக்கோயில் நடை அடைக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வெளிப்புறம் நின்று வழிப்பட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று வருகின்றனர். மேலும் முன்பாக அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் புனித நீராடி தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருப்பதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி வருகின்றது.