தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்....

சூளகிரி அருகே உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவினையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிப்பாட்டில் ஈடுப்பட்டனர்.

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்....

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளே மேடுப்பள்ளி கிராமத்தில் குரும்பர் சமுதாய மக்களின் பாத்தியமான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் ஆடிமாத தீமிதித்திருவிழா ஆண்டுத் தோறும் வெகு விமர்சியாக நடைப்பெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத தீமிதி விழா வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது.

ஆடி மாதத் தீமிதி விழாவினையொட்டி ஸ்ரீ மாரியம்மன், கூலி சந்திரய்யா, சித்தயா, தொட்டய்யா, ஸ்ரீசாக்கியம்மா ஸ்ரீலக்குமம்மா, ஆகிய கிராம தெய்வங்களை  வண்ண மலர்களால் அலங்கரித்து புஸ்ப பல்லக்கில் எழுந்தருளிய நிலையில் கிராம மக்கள் மாவிளக்கு ஊர்வலத்துடன் மேளத்தாளங்கள் முளங்க வீதி உலா  வந்தனர். மேடுபள்ளி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கிராமங்கள் வழியாக வந்த சாமி ஊர்வலம் இறுதியில் கோவில் முன்பாக  வந்து முடிவடைந்தது.

இதனைத்தொடர்ந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய்களை உடைத்து வினோத வழிப்பாட்டில் ஈடுப்பட்டனர். இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் சமுக இடைவெளியுடன் கலந்துக் கொண்டு அம்மனை சரிசனம் செய்து வழிப்பட்டனர்