"செல்போனுக்கு கொடுக்கும் மரியாதையை மாணவர்கள் கல்விக்கு கொடுப்பதில்லை" நடிகர் தாமு!

"செல்போனுக்கு கொடுக்கும் மரியாதையை மாணவர்கள் கல்விக்கு கொடுப்பதில்லை" நடிகர் தாமு!

மாணவா்கள் தற்போது செல்போனுக்கு கொடுக்கும் மரியாதையை கூட கல்விக்கு கொடுப்பதில்லை என நடிகா்  தாமு வேதனை தொிவித்தாா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு காவல்துறை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என நடிகர் தாமு மிமிக்கிரி மூலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

அம்மா சுமப்பது பத்து மாதம் ஆசிரியர்கள் சுமப்பது 12 வருடம் எனவும் தற்பொழுது நவீன காலத்தில் செல்போனுக்கு கொடுக்கும் மரியாதையை கூட கல்விக்கு கொடுப்பதில்லை என அறிவுரை கூறியுள்ளார். அவரது பேச்சில் பெற்றோர்களும் மாணவிகளும் கண்கலங்கி நின்றனர்.

இளம் வயதில் திருமணத்தை தவிர்க்க வேண்டும் என கூறியவர் மாணவிகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் படிக்க வைக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நல்ல வாழ்விற்கு அழைத்துச் செல்வார்கள் எனவும் கூறினார். வகுப்பறையில் ஆசிரியர்களை கூர்ந்து கவனித்து ஆசிரியர் மாணவிகளுக்கு உள்ள தொடர்பை பலப்படுத்தி படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையில் முன்னேறவும் அறிவுரை கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தாமு, அப்துல் கலாம் கூறியது போல் 50 லட்சம் மாணவிகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர், தற்பொழுது 28 லட்சத்தை 28 லட்சம் மாணவிகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டதாகவும், மீதமுள்ள மாணவிகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்