பொதுமக்களுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரவில்லை... அ.தி.மு.க. மீது அமைச்சர் குற்றச்சாட்டு...

அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுமக்களுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரவில்லை... அ.தி.மு.க. மீது அமைச்சர் குற்றச்சாட்டு...

அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரவில்லை என அமைச்சர் கே. கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து பகுதிகளிலும் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

சென்னையில் தொடர் மழை காரணமாக வெளியில் வர இயலாத நிலையில் உள்ள பொது மக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய ஒருவர் வீதம் 200 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,  அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர் கொண்டு வரப்பட்ட திட்டம்  செயல்படாததாலேயே தியாகராயர்நகர் சாலைகளில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளதாக குற்றம் சாட்டினார்.