நீர் பாசன சங்க பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்ட செஞ்சி. மஸ்தான்:

திண்டிவனம் அடுத்த மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நீர் பாசன சங்க பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி. மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நீர் பாசன சங்க பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்ட செஞ்சி. மஸ்தான்:

நீர்ப்பாசன சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நீர்ப்பாசன சங்க பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒன்றிய குழு பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி. மஸ்தான் கலந்துக் கொண்டு நீர் பாசன சங்க பிரதிநிதிகள் மற்றும் மக்கள் நல பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவித்து, சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வருக்கு எந்த அளவிற்கு மக்கள் மீது அக்கறை இருக்கிறதோ அதே அளவிற்கு மக்கள் நல பணியாளர்களுக்கு பற்று இருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் கூறுவது போன்று ஒவ்வொரு துறையில் இருப்பவர்களும், நான் முதல்வன் என்ற எண்ணத்தோடு பணியாற்றிட வேண்டும். குறிப்பாக இந்த ஒன்றியத்தில் இருக்கின்ற அனைத்து மக்கள் நலப் பணியாளர்களும் நான் முதல்வன் என்ற எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நீர் பாசன சங்க பிரதிநிதிகள், துறை சார்ந்த  அதிகரிகள், மக்கள் நல பணியாளர்கள் போன்றா அனைவரிடமும், இணைந்து தங்களது கிராமத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.