4 சதவிகித அகவிலைப்படியை...ஜன.1ம் தேதியிலிருந்தே வழங்க வேண்டும்...அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

4 சதவிகித அகவிலைப்படியை...ஜன.1ம் தேதியிலிருந்தே வழங்க வேண்டும்...அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவிகித அகவிலைப்படியை, ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து வழங்கவேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவிகித அகவிலைப்படியை வழங்குமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்குவது தாம் வழக்கம்.

இதையும் படிக்க : அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நீயூஸ் சொன்ன தமிழக அரசு...முன்பணம் ரூ.50 லட்சமாக உயா்வு!

ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மூன்று அகவிலைப்படி உயர்வுகளை ஆறு மாதத்திற்கு தள்ளி போட்டது. மேலும் நான்காவது அகவிலைப்படி உயர்வையும் மூன்று மாதத்திற்கு தள்ளி போட்டுள்ளது. இது போன்ற செயல்களால் பல ஆயிரம் கோடி மிச்சப்படுத்திவிட்டு, நிதிப்பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை குறைந்து விட்டதாக திமுக அரசு கூறுவது, நிர்வாகத் திறமையின்மையின் வெளிப்பாடு என்று பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவிகித அகவிலைப்படியை, ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து வழங்கவேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.