சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட அனுமதிக்கு எதிரான மறுஆய்வு மனு தள்ளுபடி...  உச்சநீதிமன்றம் உத்தரவு...

சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்ட அனுமதிக்கு எதிரான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட அனுமதிக்கு எதிரான மறுஆய்வு மனு தள்ளுபடி...  உச்சநீதிமன்றம் உத்தரவு...

சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,  8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் அனுமதி வழங்கியது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த நில உரிமையாளர் எஸ்.யுவராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான தீர்ப்பு உச்சநீதிமன்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மறுஆய்வு மனுவையும், அதில் தெரிவிக்கப்பட்ட முகாந்திரங்ளையும் பரிசீலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய காரணங்களை கண்டறிய முடியவில்லை என்றும், எனவே மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்வதாகவும், அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.