கார்பரேட் திட்டங்களுக்காக மக்களை வெளியேற்றுவதா? அரசை கண்டித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்.

கார்பரேட் திட்டங்களுக்காக மக்களை  வெளியேற்றுவதா?   அரசை கண்டித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்.

கார்பரேட் திட்டங்களுக்காக பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் கடனுக்காக ஏழை எளிய மக்களை சென்னை மாநகரத்தில் இருந்து வெளியேற்றும் திட்டத்தை முழுமையாக அரசு கைவிட கோரி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக  சேப்பாக்கம் திருவெல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது, செய்தியாளர்களை சந்தித்து , மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வா கூறியதாவது:- 

பக்கிங்காம் கால்வாயை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முடிவு எடுத்துள்ளனர். ஆனால் எந்த ஒரு திட்டம் வந்தாலும் அந்த திட்டத்தின் சாதக பாதகத்தை மக்களிடம் தெரிவிப்பது அரசாங்கத்தின் கடமை. ஆனால்  எதற்காக?  என்பதை குறித்து மக்களுக்கு அறிவிக்கவில்லை. இதை வெளியிடாமல் நேரடியாக மக்களை மிரட்டி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளை வைத்து மிரட்டி வருகிறார்கள்.

இதனை எதிர்த்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. அந்தப் போராட்டத்தை தொடர்ந்து,  திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த பகுதியில் உள்ளவர்களை அப்புறப்படுத்த மாட்டேன் என்று கூறினார். 

ஆனால் வாக்குறுதி அளித்து ஒரு மாதம் கழித்து, பின்னர் வந்து இந்த  பகுதி அப்புற படுத்தப்படும் என கூறுகிறார்கள். இப்படி கூறினால் இதை ஏழை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? .

பக்கிங்காம் கால்வாயில் குடியிருக்கும் மக்களுக்கு  எந்தவித வெள்ள பாதிப்பும் இல்லை. பறக்கும் ரயிலின் தூண்டான் கால்வாயில் நடுவில் கட்டப்பட்டுள்ளது.  அதேபோன்று பக்கிங்காம் கால்வாய் உள்ள பகுதியில் பல்நாட்டு நிறுவனங்களின் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அதைக் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் தலித் மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களின்  வாழ்விடத்தை அரசாங்கம் பறிப்பதும் இந்திய மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இதனால், மக்கள்  சொந்தமாக எழுதிய மனுவை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அளிக்க வந்திருக்கிறோம். எனவே, இங்குள்ள அதிகாரிகள் உடனடியாக மக்களின் உரிமையை புரிந்து கொண்டு இந்த நடவடிக்கை கைவிட வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும். 

நூறாண்டுகளுக்கு முன்பு மக்களுக்காக அரசாங்கம் தான் இந்த இடத்தை கொடுத்தது. அப்போது மக்களின் உழைப்பு தேவைப்பட்டது. ஆனால் இப்பொழுது, இந்த மக்கள் இவர்களுக்கு தேவைப்படவில்லை. ஆகையால் இப்போது மனு கொடுக்கிறோம். இந்த மனுவை ஏற்க விட்டால் நிராகரித்தால் மீண்டும் எங்களது போராட்டம் தீவிரமடையும்.

ஒன்றிய அரசாங்கத்திடம் இருந்து நிதி பெறுவதற்காக பக்கிங்காம் கால்வாய் ஓரம் இருக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்காக அதிகாரிகள் அதற்கான ஆவணங்களை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்கு மாறாக டாக்டர் கலைஞர் அவர்கள் 70 ஆண்டுக்கு முன்பு எப்படி மக்கள் இருக்கும் இடத்திலேயே வாழ உரிமை கொடுத்தாரோ அதே போன்று தமிழக அரசு வழங்க வேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.