நீலகிரி சுற்றுலா தலங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்தது மாவட்ட நிர்வாகம்! 

கொரோனா எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறையின் கீழ் இயங்கும் பொழுதுபோக்கு பூங்காக்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கொரோனோ தொற்று காரணமாக தமிழகத்தில் நேர கட்டுப்பாடுகளுடன் புதிய ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.பொதுமக்கள் அதிகமாக கூடும் வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பை வெளியிட்டது.அதேபோல் திரையரங்குகள் உயிரியல் பூங்காக்கள் கேளிக்கை விடுதிகள் பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொழுதுபோக்கு பூங்காக்களில் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அதன்படி மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கும் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் படகு இல்லங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் கட்டாயமாக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதிக்கப்படும் நேரத்தில் பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி பூங்காக்களில் அனுமதிக்கப்படுவர்.சுற்றுலா பயணிகள் அனைவரும் நோய் தொற்று பரவாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.