தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து என்பதில் சந்தேகம் வேண்டாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

நீட் தேர்வு ரத்து தொடர்பாக சந்தேகம் தேவையில்லை, கண்டிப்பாக நீட்டில்  இருந்து விலக்கை  தமிழக  முதல்வர் பெற்றுத்தருவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்திள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து என்பதில் சந்தேகம் வேண்டாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை சைதாப்பேட்டையில்  பருவமழைக்கு முன்பாக கழிவுநீர் கட்டமைப்புகளை முழுமையாக தூர்வாருதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.  

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்: 

வடகிழக்கு பருவமழைக்கு முன்னாள் பாதாள சாக்கடை பிரதான குழாய் அடைப்புகளை  தூர்வாருதல் போன்ற பணிகள் ஆண்டுதோறும் செய்வது வழக்கம், ஆனால்  கடந்த காலங்களில் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதனால் 434 வாகனங்கள் மூலம் சென்னையில் 4200 கிலோ நீலம் உள்ள பாதாளசாக்கடை தூருவாரும் பணி  மற்றும் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளதாக கூறிய அவர்,  ஜூன்30 ஆம் தேதி வரை இப்பணி நடைபெறும் என்று கூறினார்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும்  மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றினால்  கொரோனாவின் 3வது அலை பாதிக்காது எனக் கூறினார். 

 நீட்  தேர்வு ரத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு ரத்து  தொடர்பாக ஏற்கனவே  சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட  தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் உள்ளதால் தற்போது  ஓய்வு பெற்ற நீதிபதி   ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அறிக்கையோடு சேர்த்து நீட் ரத்து தீர்மானம் அனுப்ப உள்ளோம் என்றார். 

நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களை பாதிக்கப்பட்டவர்கள் ஏ.கே.ராஜன் குழுவிற்கு தெரிவிக்கலாம் எனவும் கூறினார். மேலும் நீட்  தேர்வு ரத்து  தொடர்பாக சந்தேகம் தேவையில்லை எனவும்  கண்டிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கை தமிழக முதல்வர் பெற்றுத்தருவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்திள்ளார்.