ரஜினி முதல் அஜித் வரை! செஸ் ஒலிம்பியாடிற்கு வரவேற்கப்பட்ட பிரபலங்கள் யார்?

தமிழகத்தில் நடக்கும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழ் திரையுலகப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்க:ள் யார் என்று பார்க்கலாம்!

ரஜினி முதல் அஜித் வரை! செஸ் ஒலிம்பியாடிற்கு வரவேற்கப்பட்ட பிரபலங்கள் யார்?

2022ம் ஆண்டின் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாளை (ஜூலை 28ம் தேதி) தொடங்குகிறது. 187 நாடுகள் பங்கேற்கும் இந்த சர்வதேச போட்டி, முதன் முறையாக இந்தியாவில், அதுவும் நமது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான ப்ரொமோஷன் வேலைகள் படு பயங்கரமாக நடந்தது.

சென்னையின் அடையாளமான நேப்பியர் பாலத்தை, ஒரு பெரும் சதுரங்கம் போலவே பெயிண்ட் செய்து அழகுப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: சதுரங்கமாக மாறிய சென்னையின் அடையாளம்- நேப்பியர் பாலம்! - வைரல் வீடியோ

மேலும், இந்த சர்வதேச செஸ் போட்டிக்கான சின்னத்தை, தமிழர்களின் ஆடையான் அவேஷ்டி சட்டையோடு, தமிழ் என்ற குதிரை வடிவில் உருவமைத்து ப்ரொமோஷன் செய்து வர, சென்னை முழுவதும், இந்த தம்பி நிரைந்திருக்கிறார்.

மேலும் படிக்க: முதல்முறையாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !!

நேரு அரங்கில் நடக்க இருக்கும் இந்த போட்டியின் திறப்பு விழாவில் கலந்துக் கொள்ள இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டு நாள் பயணமாக பிரதமர் சென்னை வர இருப்பதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், அரசுத் துறைகள், பெரும் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் அளிக்கும் இடங்களைத் தவிர்த்து, பொதுவாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தற்போது தமிழ் திரை பிரபலங்கள் பலருக்கு வரவேற்புக் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூரியா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. உலக அளவில் பெரிதாக எதிர்பார்க்கப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டி, நாளை முதல் ஷெரடான் ரெச்சர்டின் 4 பாயிண்ட்ஸ் என்ற தனியார் விடுதியில் நடக்க இருக்கிறது. இதற்காக பலரும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், இந்த தகவல் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.