எங்க ஏரியா உள்ளே வராதே! மக்களை விரட்டிய ’கொம்பன்’

எங்க ஏரியா உள்ளே வராதே! மக்களை விரட்டிய ’கொம்பன்’

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமத்தில் புகுந்த ஒற்றை காட்டுயானை அங்குள்ள தென்னை மற்றும் வாழை தோட்டத்தில் நூழைந்து பழங்களை சேதப்படுத்தியது. 

மேற்கு தொடர்ச்சி மலை வனத்தில் இருந்து தெள்ளாந்தி அருகே உள்ள செல்வம் என்பவருக்கு சொந்தமான தென்னை தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை ஏராளமான வாழை, தென்னை மரங்களை முறித்து சேதப்படுத்தியது. இதனை கண்ட கிராம மக்கள் ஒற்றை யானையை விரட்ட முயன்றன.ஆனால் யானை அப்பகுதியை விட்டு செல்லாமல் கிராம மக்களை துரத்த ஆரம்பித்தது. இதனால் ஒற்றை யானையிடம் இருந்து உயிர் தப்பித்து கிராம மக்கள் ஓட்டம் பிடித்தார்கள்.

இதனிடையே விளைநிலங்களை சேதப்படுத்திய ஒற்றைக்காட்டு யானையை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.