வெறும் காலில் வெளியே போகாதீங்க - கோடையை சமாளிக்க அமைச்சர் அறிவுரை

வெறும் காலில் வெளியே  போகாதீங்க - கோடையை சமாளிக்க அமைச்சர் அறிவுரை


கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்பநிலை பாதி்ப்பை தவிர்க்க
மதுபானங்கள் மற்றும் குளிர்பானங்களை  தவிர்க்க வேண்டும் என்று 
மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்.

மேலும் படிக்க | சிவகங்கையில் வினோத வழிபாடு...200 ஆண்டுகளாக மாறாத அதே பாரம்பரியம்...!

வெப்ப நிலையிலிருந்து பாதுகாக்க செய்யக்கூடாதவை

1. காலை 11 மணி முதல் 3 மணி வரை வெய்யிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

2. அதிக உடல் உழைப்பு வேண்டிய வேலைகளை தவிர்க்க வேண்டும்.

 3. வெறும் காலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

4. மதுபானங்கள், டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களை தவிர்க்கவும்,

The Carbon Footprint of a Cup of Tea - Circular Ecology

 இவை உடலில் நீரிழப்பு ஏற்படுத்தும்

5. அதிக புரத சத்து உள்ள உணவுகள் மற்றும் பழைய உணவு பொருட்களை தவிர்க்கவும்.

அதிகளவு புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்து  ஏற்படும் தெரியுமா? | risks associated with protein overconsumption - Tamil  BoldSky

6. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் வெப்பநிலை அபாயகரமான அளவிற்கு அதிகரிக்கும்

மேலும் படிக்க ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னை எப்படி சாத்தியம்? தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்

முதலுதவி மற்றும் சிகிச்சைகள்

1. அதிக உடல் வெப்பநிலையுடன் மயக்கம், குழப்பம் அல்லது வியர்வையற்று தோல் உலர்ந்து மேற்கூரியவற்றில் ஏதாவது ஒரு அறிகுறியுடன் யாரையாவது கண்டால் உடனடியாக 108 அல்லது 104 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும்.

2. உதவிக்காகக் காத்திருக்கும்போது அந்த நபரை உடனடியாக குளிர்விக்கவும். உங்களால் முடிந்தால் குளிர்ந்த இடத்திற்கு நகர்த்தவும்.

3. குளிர்ந்த நீரை இவர்களின் தோல் இல்லது ஆடையின் பெரிய பகுதிகளில் படுமாறு ஊற்றவும் அல்லது முடிந்தவரை அந்த நபரை காற்றோட்டமான சூழ்நிலைக்கு விரைவில் மாற்றவும்.

4. கடும் வெப்பம் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க அனைத்து மாவட்ட துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.