குடை இல்லாமல் வெளியே போகாதீங்க.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழ்கத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

குடை இல்லாமல் வெளியே போகாதீங்க.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் தென் தமிழக மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய மழையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிலும்  அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. 

இந்த நிலைில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

இதேபோன்று நெல்லை மாவட்டத்தில் அம்பை, பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.