மகளிர் உரிமைத் தொகை திட்டம்: இன்று முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக வினியோகம்!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: இன்று முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக வினியோகம்!

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உாிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வீடு வீடாக வினியோகிக்கப்படுகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்கள், வயல்வெளிகளில் வேளாண் பணிகளில் ஈடுபடும் பெண்கள், மீனவ பெண்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்துக்கு "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்" என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்கிடையே இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்தது. அதில் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் தான் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும் எனவும், 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்வும் தொிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆண்டு வருமானம் இரண்டரை  லட்சம் ரூபாய்க்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று முதல் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன், அதற்கான அடையாள சான்று ஆகியவை ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக வினியோகிக்கப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சிறப்பு முகாம்கள் வரும் 24-ம் தேதி நடைபெறும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க || இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்!