தனித்தன்மை மிக்க கல்விக் கொள்கை அமைக்கப்படுமா என சந்தேகம்: பதவியிலிருந்து விலகிய ஜவகர் நேசன் !!!

தனித்தன்மை மிக்க கல்விக் கொள்கை அமைக்கப்படுமா என சந்தேகம்: பதவியிலிருந்து விலகிய ஜவகர் நேசன் !!!

தேசிய கல்விக் கொள்கை தனித்தன்மை - குழு 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் மாநில உயர்கல்வி குழுவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நேற்றைய தினம் விலகிய ஜவகர் நேசன் செய்தியாளர்களை சந்தித்தார். மாநில அரசு சென்று வருடம் ஏப்ரல் மாதம்  தேசிய கல்விக் கொள்கையை புறக்கணித்து  தமிழகத்துக்கு என ஒரு தனித்தன்மை நிற்க கல்விக் கொள்கையை உருவாக்க உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில்  என்னுடன் இணைந்து ஒரு குழு 13 மாதங்கள் பணியாற்றியது.

மேலும் படிக்க | மே - 12 -ல் 234 தொகுதிகளிலும் லஞ்ச ஊழலுக்கு எதிராக ஒலி எழுப்பும் போராட்டம் - அர்ஜூன் சம்பத்

தனித்தன்மையை கொண்ட கல்விக் கொள்கை என்றால் அந்த மாநிலத்தில் இருக்கும் மக்களின் நிலையை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும். ஆனால் உருவாக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் முறையாக செயலாளப்படுத்த படவில்லை.தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கை என வரும்போது மக்களின் பிரச்சனையை வெளிப்படுத்தும் படியும், மக்களிடம் இருக்கும் சிக்கல்களை கண்டறிந்து அதன் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டறியும் படியும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தை உள்ளது. 

கல்வியின் தத்துவமும், தேசிய கல்விக் கொள்கையும் - ஜவகர் நேசன் (எழுத்தாக்கம்:  தா.சந்திரகுரு) - Bookday

எந்த விதமான முன்னேற்றமும் இல்லை 

தேசிய கல்விக் கொள்கையை  பிரதானப்படுத்தி தமிழகத்தின் கல்விக் கொள்கை அமைய வேண்டும் என சில அதிகாரிகள் செயல்படுவதாகவும்  மேலும் அதிகாரிகள் தன்னை அவர்கள் அறைகளுக்கு அழைத்துச் சென்று மிரட்டியதாகவும் அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.  இரண்டு வாரங்களுக்கு முன் முதல்வரிடம் இந்த பிரச்சனையை பற்றி முறையிட்டதாகவும் அதிலும் எந்த விதமான முன்னேற்றமும் கிடைக்காததால் மக்களிடம் இந்த பிரச்சனையை கொண்டுவருவதாக தெரிவித்தார்.

Bookday - NEP NEP

கமிட்டியை கலைக்க கூடிய வாய்ப்புகள் எற்படும் என மிரட்டல்

இந்த கொள்கை தொடர்பாக 13 குழுக்கள் அமைத்ததாகவும் 113 உலகலாவிய துறை வள்ளுனர்களையும் நிபுனர்களையும் குழுக்களாக அமைத்து 252 பக்கங்கள் கொண்ட புத்தகமாய் அமைத்தும் மேல் அதிகாரிகளிடமிருந்து தேசிய கல்வி கொள்கையை சார்ந்து இருக்கும் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என மிரட்டல்கள் ,அளுத்தங்கள் இடம்பெறுகின்றன  இதனால் தமிழகத்துக்கு என தனித்தன்மை மிக்க கல்விக் கொள்கை அமைக்கப்படுமா என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். தன்னிடம் முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திதரன் சொல்வதை செய்ய வேண்டும் எனவும் அல்லது கமிட்டியை கலைக்க கூடிய வாய்ப்புகள் எற்படும் என மிரட்டியதாக தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை: சாதக பாதகங்கள் என்ன? - ஓர் அலசல்! | Story about  merits and demerits of new education policy - Vikatan

40% பேர் குழுவில் ஆர்வம் காட்டுவதில்லை - கல்விக்கொள்கை 

11 மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் விவாதங்கள் தொடங்கியுள்ளன ஆகையினால் நுழைவுத் தேர்வு தொடர்பான விவாதங்கள் ஏற்படவில்லை என கூறினார்.பெரும்பாலான உறுப்பினர்கள் குழுவில் பங்கேர்ப்பதில்லை. 60 % பேர் குழுவில் பங்கேற்கிறார்கள் . 40% பேர் குழுவில் ஆர்வம் காட்டுவதில்லை.தனித்துவம் வாய்ந்த கல்வி கொளையில் எந்த தினிப்பும் இருக்கக் கூடாது , அவர் அவர்கள் அவர்களது பணிகளை செய்யவேண்டும் , மற்றவர்கள் குழு எடுக்க வேண்டிய பணிகளில் கருத்துகளை தினிக்க கூடாது , கல்வி கொள்கையை அமைக்கும் குழுவிற்க்கு சுதந்திரம் கிடைக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.இந்தக் குழுவுக்கு ஆக்கமும் ஊக்கமும் அனைவரும் அழைத்தால் இந்த மாநில கல்விக் கொள்கை மக்களுக்கான கல்விக் கொள்கையாக இருக்கும் எனவும் கூறினார்.