மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி - முதலமைச்சர் ஆய்வு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடசென்னை மற்றும் மத்திய சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வடிகால் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவ மழை வரும் அக்டோபர் 2ஆம் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 895 புள்ளி 31 கிலோமீட்டர் நீளமுள்ள 4 ஆயிரத்து 254 மழைநீர் வடிகால்களில் தூர்வாருதல் பணிகளும், 948 மழைநீர் வடிகால்களில் உள்ள சிறு பழுதுகளைச் சரிபார்த்து பராமரிக்கும் பணிகளும், நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்திய சென்னை மற்றும் வட சென்னைக்கு உட்பட்ட பகுதிகளான, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓட்டேரி, பாபா நகர், பிரித்தானியா நகர், புழல் உபரி நீர் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், கொடுங்கையூர் இணைப்புக் கால்வாய் உள்ளிட்ட இடங்களில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம்  கேட்டறிந்தார்.