அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சாமானியர்கள் உற்சாகம்!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சாமானியர்கள் உற்சாகம்!

 சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை சரிந்து காணப்பட்டது. அதாவது ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. இதனால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் தங்கம் விலை படிப்படியாக உயர தொடங்கியது. நேற்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.216 அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.4,469 க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 128 குறைந்து, ரூ.35 ஆயிரத்து 752 க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.90க்கும் விற்பனையாகிறது.