திராவிட மாடல்: வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் நடந்து கொள்கிறது - முன்னாள் அமைச்சர் காட்டம் !!!!

திராவிட மாடல்: வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் நடந்து கொள்கிறது - முன்னாள் அமைச்சர் காட்டம் !!!!

மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் புதியதாக சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையில் பங்கேற்ற முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்திப்பு.ஜல்லிக்கட்டு தீர்ப்பு வரவேற்கக் கூடியது. சட்ட நுணுக்கங்கள் அறிந்து அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் தொகுதி நிதிகளை போராடித் தான் பெற வேண்டி இருக்கிறது. உங்கள் தொகுதியின் முதல்வன் திட்டத்தின் கீழ் 10 கோரிக்கைகள் பெறப்பட்டது தற்போது கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது

முதலமைச்சருக்கு ஞாபக மறதி 

நம்முடைய முதல்வருக்கு அப்பப்ப ஞாபகம் மறதி வந்து விடுகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மது கூட கிடைக்காது என்று கூறினார்கள்  தமிழகத்தில் மது ஆறு ஓடுகிறது. கள்ளச்சாராயத்திற்கு பலர் உயிரிழந்துள்ளனர் இன்னும் பல உயர் ஆடிக் கொண்டிருக்கிறது. குடும்பமே கலாச்சாராயம் குடித்தவர் இறக்க வேண்டும் என நினைக்கும் அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சாலை விபத்தில் இறப்பு 2 லட்சம் மூன்று லட்சம் கொடுக்கப்படுகிறது ஆனால் சாராயம் குடித்தவர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு 10 லட்சம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவுக்கே இந்த அரசாங்கம் முன்னோடியாக உள்ளது கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு இவ்வளவு தொகை வழங்கியது இல்லை.

கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்..முதல்வர் ஸ்டாலின் கடும்  உத்தரவு | Goondas Act will flow if Toxic liquor is sold CM Stalin's action  order - Tamil Oneindia

திராவிட மாடல் என வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் நடந்து கொள்கிறது

சாராயம் வியாபாரிகள் சொத்துக்கள் பறிமுதல் செய்து அந்த சொத்தை விற்று நிதி கொடுத்திருக்கலாம் அரசு நிதி கொடுத்திருக்கிறார்கள். திராவிட மாடல் என வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் நடந்து கொள்கிறது. முதலமைச்சர் பொம்மை முதல்வர் என்பதை மீண்டும் பலமுறை உறுதி செய்து கொண்டிருக்கிறார். ஒரு மாற்றுத்திறனாளி தமிழக அரசே ஏமாற்றி உள்ளார். உள்ளூர் அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் முதலமைச்சர் என அனைத்தையும் ஏமாற்றி உள்ளார்கள் அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் நிர்வாகம் சரி இல்லை ஆகையால் தான் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கள்ளச்சாராய்த்தர்களுக்கு அமைச்சர்களை துணை போகிறார்கள். கள்ளச்சாராயத்தில் உயிர் வந்தவர்களுக்கு நிதி வழங்கப்படுகிறது சித்திரை திருவிழாவில் உயர்ந்திருக்கும் நிதி வழங்கப்பட்டது. சித்திரைத் திருவிழாவை சட்ட ஒழுங்கு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

கள்ளச்சாராயம் குடித்து பலியான 13 குடும்பங்களுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி-  அமைச்சர்கள் வழங்கினர் | Tamil News Ministers provided 1 crore 30 lakh fund  for 13 families of ...

மேலும் படிக்க | கனிமவள கொள்ளை : மறுமலர்ச்சி இயக்கம் மனு - 24-ம் தேதி தள்ளிவைத்த நீதிமன்றம்!!!

திமுக ஆட்சி காலத்தில் மதுரை ஒரு தீவு போல் மாற்றி விட்டார்கள். மதுரையில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இடமிருந்து நிதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால்  மதுரை மேயர் வேலை பார்க்காமல் அமைதியாக இருக்கிறார் திமுகவில் 2 கோடி தொண்டர்களை இணைப்பதாக கூறி நியாய விலை கடைகளில் ஆதார் அட்டைகளை வழக்காயமாக வாங்குவதாக புகார் அளித்துள்ளது.திமுக வட்டச் செயலாளர் திமுக நிர்வாகிகள் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். மதுரையில் மகா மாசி திருவிழா நடைபெறுவது போல அதிமுகவின் பொது கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது அதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது