மழை பொழிவு இல்லாததால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது - 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை..!

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாமல் நீர் வரத்து இன்றி அணையின் நீர்மட்டம், 69 அடிக்கு சரிந்துள்ளது.

மழை பொழிவு இல்லாததால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது - 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை..!

தேனி மாவட்டம்  பெரியகுளம்  அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் நீர் பிடிப்பு பகுதிகளான அகமலை, கண்ணக்கரை, மற்றும் அதன் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி  மலைபகுதியில் போதிய அளவு தென்மேற்கு பருவமழை இல்லாததால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக அனைத்து பகுதிகளும் நீர்வரத்தின்றி காணப்படுகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில், தற்பொழுது அணையின் நீர்மட்டம் 69.20 அடியாக குறைந்துள்ளது. மேலும் அணைக்கு நீர் வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 25 கிராமங்களுக்கு குடிநீருக்காக 3 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்பொழுது அணையின் நீர் இருப்பு 29.40 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது.

மேலும் தொடர்ந்து அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் பெரியகுளம் நகராட்சி மற்றும் 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.