சட்டம் ஒழுங்கு பிரச்சனை...அமித்ஷாவிடம் முறையிடவுள்ள எதிர்க்கட்சி தலைவர்...!

சட்டம் ஒழுங்கு பிரச்சனை...அமித்ஷாவிடம் முறையிடவுள்ள எதிர்க்கட்சி தலைவர்...!

தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து புகார் அளிப்பதற்காக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் அமித்ஷாவை நேரில் சந்திக்க உள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி டெல்லி செல்லும் அவர், இன்று இரவு 8 மணிக்கு உள்துறை அமைச்சரையும், நாளை காலை பாஜகவின் தேசிய தலைவரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமியுடன் தம்பிதுரை, வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம் ஆகியோரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : பிரதமர் நிதிக்கு ஏன் தணிக்கை இல்லை? - காங்கிரஸ் கேள்வி!

மேலும், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளிக்க அதிமுக முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை இறுதி செய்யும் சந்திப்பாகவும் இது அமையலாம் என அதிமுக மூத்த நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.