கழக உறுப்பினர்களுக்கு நன்றி கடிதம் அனுப்பும் இபிஎஸ்...எதற்காக?!!

கழக உறுப்பினர்களுக்கு நன்றி கடிதம் அனுப்பும் இபிஎஸ்...எதற்காக?!!

அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்புக்கு எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வருகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது.  அதையடுத்து மார்ச் 19ஆம் தேதி பொது செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவரை தொடர்ந்து கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகள் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்களை அளித்தார்கள். 

அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 28ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.  இந்நிலையில் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட விருப்பம் மனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியே நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வருகிறார்.

அந்த கடிதத்தில் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் பல்வேறு வரலாற்று சிறப்புகளை பெற்றுள்ள கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் தாங்கள் கொண்டுள்ள விசுவாசத்திற்கு எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தங்களுடைய கழகப் பணிகள் சிறக்க எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகள் என கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

இதையும் படிக்க:  குடியரசு தலைவரால் வழங்கப்பட்ட பத்ம விருதுகள்....!!