தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோகம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோகம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர்  இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மனுத்தாக்கலுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார்.

அதேபோல் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் அதிகரித்துள்ளதாகவும் அதனை தடுப்பதற்கான சட்டம் இயற்றுவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை என்றார். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடாததால் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்திருப்பதாகவும் பழனிசாமி விமர்சித்தார்.