வந்தே பாரத் ரயிலில் பயணித்த எடப்பாடி பழனிசாமி.....!

வந்தே பாரத் ரயிலில் பயணித்த எடப்பாடி பழனிசாமி.....!


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 24ம் தேதிமுதல் சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனையடுத்து இன்றைய தினம் காலை சேலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னை புறப்பட்டார். 

முன்னதாக சேலம் ரயில் நிலையத்திற்கு வந்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், மாநகர அவை தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் வெங்கடாஜலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்கே செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி புதிதாக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் ஏறி சென்னை கிளம்பினார்.

சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையானது பிரதமர் மோடி, கடந்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ரயில் இன்று சேலத்தில் இருந்து கிளம்பிய நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

இதையும் படிக்க     } லஞ்ச ஒழிப்பு துறை முன்பு ஆஜராக வேண்டும்...! எஸ் பி வேலுமணிக்கு ஒரு மாதம் அவகாசம்...!